என் மலர்
உலகம்
- விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
- விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த ஜுஹாய் ஏர்ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
- 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.
- ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் இதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
- எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் ஈராக் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. கால மாற்றத்தில் சமீப காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது.

தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. 1959 இல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து இந்த உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த பிரிவு திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள்ளது. இந்நிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை சுட்டிக்காட்டி மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
- புளோரிடாவில் 3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள மந்திரிகள், அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்சை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
முன்னாள் ராணுவ அதிகாரியான மைக்கேல் வால்ட்ஸ், புளோரிடா மாகாணத்தில் 3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார். காகஸ் என்பது இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதிநிதிகள் சபையில் உள்ள எம்.பி.க்களின் இருகட்சி கூட்டணியாகும்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய மந்திரியாக செனட்டராக உள்ள மார்கோ ரூபியோவை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்பதவி இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு கிடைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அவரை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெபானிக்கை டிரம்ப் நியமித்துள்ளாா். எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.
- இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து.
- வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து நடவடிக்கை
கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.
இந்த நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் பிராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-ந்தேதி இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு வருவதை கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
திரிவேணி கோவிலுக்கு எதிராக பரப்பப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனேடிய இந்து சமூகம் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இந்து கோவில்களில், வருகிற 16,17-ந்தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, கனடா எம்.பி., சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது.
- பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:-
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.
அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே வடக்கு இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
- கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த டெக்கனிகல் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று யூகிக்க முடிந்தாலும் இது பற்றி அந்நாடு வாய் திறக்காமல் இருந்தது.
ஆனால் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்தார்.இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக நடத்திய ராக்கெட் தாக்குதல் நிலைமையை மோசமாகியுள்ளது.

லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 165 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா பே பகுதியில் மக்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மேல் பாய்ந்தது.. இந்த தாக்குதலில் 1 வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை இடைமறித்து அளித்ததால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
மீதமுள்ள ராக்கெட்டுகள் திறந்த வெளிகளில் விழுந்தன. கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஹைபா பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே பெரிய அளவிலானது என்று அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ராணுவம் அலர்ட்டில் உள்ளது. தற்போதைய தாக்குதல் குறித்து கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவ பய்னபடுத்திய லான்சர்களை டிரோன் தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
- வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
- ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.
போர்ட் லூயிஸ்:
இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இந்தநாட்டில் (நவ. 10) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான - பார்டி டிராவைலிஸ்ட்(பிடி'ஆர்') மற்றும் மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில், மொரிஷியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நவீன் ராம்கூலம்த்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
ஜெருசலேம்:
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து 90க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பெரும்பானான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இந்த ராக்கெட் தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்க்கபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்பட்டது.
- விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் உரையாடினர் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து வெளியான தகவல்களில் டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை என்று ரஷியா தெரிவித்து உள்ளது.
மேலும், இருநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும் போது "இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்," என்று தெரிவித்தார். மேலும், ரஷிய அதிபர் மற்றும் டொனால்டு டிரம்ப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார் என்றும் இருவரும் கடந்த வியாழன் கிழமை உரையாடினர் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபரான எலான் மஸ்க் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராமாயணத்தில் ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.
இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் ராமர் பாலம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்திய மக்களை கவர்ந்துள்ளது.
5 நிமிட விளம்பர வீடியோவில் ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.
அந்த வீடியோவில், சீதையை கடத்திச் சென்ற அசுர மன்னன் ராவணன் அவளை எங்கே அழைத்துச் சென்றான் என்று அந்த குழந்தை கேட்க, ராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அந்த பாட்டி தனது பேரனிடம் விவரிக்கிறாள்.
ராவணன் குகை, சீதா அம்மன் கோவில், ராமர் பாலம் உள்ளிட்ட இடங்களை பற்றி தனது பேரனிடம் பாட்டி விவரிக்க, "ராமர் பாலம் இப்போதும் இருக்கிறதா?" என ஒரு குழந்தை கேட்கிறார். அதற்கு "ஆமாம் அதை இன்றும் பார்க்கலாம்" என பாட்டி பதிலளிப்பதும்.
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த விளம்பர வீடியோ உருவாகியுள்ளது. வடஇந்தியாவில் உள்ள இந்து மக்களிடையே இந்த விளம்பர வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.
- உண்மையான காதல் என்பது மிக மிக அரிதானதாகவே அமையும்.
- காதலர் தினம் 7 நாட்களுடன் கூட்டமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டேயுடன் தொடங்கி, அதைத் தொடர்ந்து ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் இறுதியாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என நீண்ட லிஸ்டே உள்ளது.
ஆனால் எல்லோருக்கும் காதல் உடனே அமைவதில்லை. அதிலும் உண்மையான காதல் என்பது மிக மிக அரிதானதாகவே அமையும். எனவே சிறுபான்மையினர்காளான காதலர்களை தவிர்த்து தனித்திருக்கும் பெரும்பான்மையினர் சிங்கில்ஸ் என இணைய தலைமுறையால் அழைக்கப்படுகின்றனர்.

வருடத்தின் தொடக்கத்தில் காதலர் தினம் 7 நாட்களுடன் கூட்டமாக வந்தாலும் வருட இறுதியில் சரியாக சொன்னால் நவம்பர் 11 ஆம் தேதி [இன்று] சிங்கிள்ஸ் டே சிங்கிளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்களை தாங்களே நேசிக்கவும், காதல் தோல்வியில் சிங்கிள் ஆனவர்கள் அதில் இருந்து விடுபட்டு புதிய பாதையை தேர்வு செய்யவும் இந்த சிங்கிள்ஸ் டே ஒரு பாலமாக இருக்கும். இந்த நாளில் 'மூன்றாம் பிறை', 'இயற்கை', '96', 'தளபதி' உள்ளிட்ட படங்களையும் பார்க்கலாம்.






