search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "england PM"

    • புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
    • புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது

    இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.

    புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

    "மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

    2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்க வெள்ளை மாளிகை மஸ்க் பொய் சொல்வதாக கூறியது
    • அனைவரின் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை என்றார் சுனக்

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்", என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    இது உலகெங்கும் உள்ள யூதர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்க் கூறுவதை "வடிகட்டிய பொய்" எனவும் விமர்சித்திருந்தது.

    எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வந்த தங்கள் விளம்பரங்களை குறைத்து கொள்ள தொடங்கின. இதனால் எக்ஸ் நிறுவன விளம்பர வருவாயும் குறைய தொடங்கியது. இவ்வருட இறுதிக்குள் அது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்ற யூத எதிர்ப்பிற்கு எதிரான பேரணி ஒன்று நடைபெற்றது.

    இங்கிலாந்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், தனது நிலைப்பாட்டை குறித்து ரிஷி சுனக் கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவருக்கு ஊடகங்களில் அழுத்தம் தரப்பட்டு வந்தது.

    இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    என்னுடன் பழகும் ஒவ்வொரு மனிதரும் கூறும் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், யூதர்களுக்கு எதிரான வெறியையும், வன்முறை சம்பவங்களையும், அவர்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் நான் எதிர்க்கிறேன். நீங்கள் சாலையில் செல்லும் யாரோ ஒருவரா அல்லது எலான் மஸ்கா என்பது குறித்தெல்லாம் எனக்கு கவலையில்லை. தகாத வார்த்தைகளால் பொய்யாக விமர்சிப்பது அனைத்து வகையிலுமே ஏற்க முடியாதது. எல்லா வகையிலுமே யூத எதிர்ப்பு என்பது முழுவதும் தவறு.

    இவ்வாறு சுனக் தெரிவித்தார்.

    • விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.
    • பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

    விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷிதா மூர்த்தியை மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த தூதரர்கள் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.

    இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஷி சுனக், இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், "இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.

    • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
    • இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்தார்.

    இங்கிலாந்தில் சமீப நாட்களாக காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்த உரையாடலின்போது, "இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ரிஷி சுனக்கை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    அத்துடன் இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் இந்திய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கையின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பைசாகி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

    ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

    ×