டெல்லிக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்- மத்திய அமைச்சர் வரவேற்பு

விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.
டெல்லிக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்- மத்திய அமைச்சர் வரவேற்பு
Published on

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷிதா மூர்த்தியை மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த தூதரர்கள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஷி சுனக், இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், "இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com