என் மலர்

  உலகம்

  அதிபர் கோத்தபய ராஜபக்சே
  X
  அதிபர் கோத்தபய ராஜபக்சே

  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அவசர கதியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என இலங்கை எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  கொழும்பு:

  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் பொதுமக்கள் நடத்திய போராட்டததின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி விலகினார்.

  அவரது ஆதரவாளர்களுக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் வன்முறையாக மாறியது.

  இதற்கிடையே, இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

  இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது. அப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மந்திரன் கொண்டு வந்த தீர்மானத்தை 68 பேர் ஆதரித்த நிலையில், 119 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 

  இதனால், இலங்கை அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாமா என்ற வாக்கெடுப்பில் ஆளும் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது. 
  Next Story
  ×