search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தாக்குதலில் சேதமடைந்த கட்டிடம்
    X
    தாக்குதலில் சேதமடைந்த கட்டிடம்

    லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - இரண்டாம் கட்ட ராணுவ நடவடிக்கையை தொடங்கியது ரஷியா

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. மரியுபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி அந்நகரை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
    22.4.22


    18.00: உக்ரைனில் ரஷிய படைகள் கண்மூடித்தனமாக ஷெல் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளன. இவை போர்க்குற்றங்களுக்கு இணையான நடவடிக்கைகள் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது. 

    உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் மிச்செலி கூறி உள்ளார். 

    17.30: ரஷிய படைகள் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர் விளாடிமிர் காரா-முர்சா ஜூனியர் மீது ரஷிய அதிகாரிகள் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

    17.00: உக்ரைனின் கிழக்கு தொழில்துறை மையப்பகுதியான டான்பாஸ் மற்றும் தெற்கு உக்ரைனை முழு கட்டுப்பாட்டிற்குள் கொணடு வரும் நோக்கத்துடன், இரண்டாம் கட்ட ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

    12.53: ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரிஷ்சக் தெரிவித்துள்ளார். போர் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் மீட்பு நடவடிக்கைகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என கூறியுள்ளார்.

    06.25: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

    03.30: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


    00.30: அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட 29 அமெரிக்கர்கள் தங்கள்து எல்லைக்குள் நுழைய பயண தடை விதித்துள்ளது ரஷியா.
    Next Story
    ×