search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
    X
    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

    பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழக்கு- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

    பாராளுமன்றத்தை கலைப்பது உள்பட பிரதமர் மற்றும் அதிபரின் அனைத்து உத்தரவுகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்தார்.
    இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி  எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறும் நிலையில், பாராளுமன்றத்தை கலைப்பது உள்பட பிரதமர் மற்றும் அதிபரின் அனைத்து உத்தரவுகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று  பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பான வாதங்களை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்.. தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்
    Next Story
    ×