search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது

    அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
     
    உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

    அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
     
    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.21 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×