search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி- டிரம்ப் இணைய வாய்ப்பு

    டிரம்ப் டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி பயன்படுத்த போவதாக அறிவித்தார். அதன்படி புதிய செயலியை உருவாக்கும் பணியில் டிரம்பின் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.

    ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதால் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கடந்த ஜனவரி 6-ந் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

    கலவரத்துக்கு டிரம்பின் கருத்துகளே தூண்டுதலாக இருந்தது என்று கூறி அவரது டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப் டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி பயன்படுத்த போவதாக அறிவித்தார். அதன்படி புதிய செயலியை உருவாக்கும் பணியில் டிரம்பின் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், டொனால்டு டிரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், ‘கேட்டர்’ என்ற புதிய சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார்.

    டுவிட்டர் பாணியில் புதிய சமூக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப் இணைவார் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய செயலிக்கு டிரம்ப் எந்த நிதியும் அளிக்கவில்லை என்றார்.

    கேட்டர் செயலியின் விளம்பரங்கள் கூகுளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஒரு சார்பற்ற வலைதளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×