search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    ஜோ பைடனை வெள்ளை மாளிகையில சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர்

    2016ல் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அடுத்த மாதம் 9ம்தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஜப்பானின் யோமியூரி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. 

    இந்த சந்திப்பின்போது இருதரப்பு நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் சுதந்திரமாக கடந்து செல்வதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் சுகா ஏப்ரல் மத்தியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தலைமை கேபினட் செயலாளர் கூறி உள்ளார். 

    இதன்மூலம், ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை சுகா பெறுவார். இதேபோல் 2016ல் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார்.
    Next Story
    ×