search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு

    ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    டாகர்:

    ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “கொரோனா பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கை விடுத்தும் கவனிக்கப்படாமல் போய் விட்டது. இது தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுத்து விட்டது’’ என குறிப்பிட்டனர்.

    மருத்துவ ஆக்சிஜன் ஆலையை நிறுவ சுமார் 12 வாரங்கள் ஆகும். ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்து, நோயாளிகள் இறக்கத்தொடங்கிய பின்னர்தான் பிரேசில் மற்றும் நைஜீரியாவிலும், குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளிலும் போதுமான பொருட்களை முழுமையாக வினியோகிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    “மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கும், கிடைப்பதற்குமான இடைவெளி நமது காலத்தில் சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது” என்று லண்டன் சுகாதார கல்லூரி இயக்குனர் பீட்டர் பியாட் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×