search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாடர்னா தடுப்பூசி மருந்து
    X
    மாடர்னா தடுப்பூசி மருந்து

    அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசியை பயன்படுத்தலாம் -வல்லுநர் குழு பரிந்துரை

    மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 

    இதேபோல் மாடர்னா நிறுவன தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எப்டிஏ) விண்ணப்பித்தருந்தனர். 

    உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழுவினர், இந்த மருந்தின் செயல்திறன் குறித்தும், பரிசோதனை முடிவுகளையும் பரிசீலனை செய்து தங்கள் பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதில், மாடர்னா தடுப்பூசி மருந்தை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என கூறி உள்ளனர். எனவே மாடர்னா தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாடர்னா தடுப்பூசி மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×