search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் நடந்த பகுதி
    X
    தாக்குதல் நடந்த பகுதி

    போலீஸ் சோதனைக்கு அஞ்சி வெடிகுண்டை வெடிக்கச் செய்த தற்கொலைப்படை பயங்கரவாதி

    ரஷியாவில் போலீசார் சோதனையின் போது பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் அந்த பயங்கராவாதி மட்டும் உயிரிழந்தான்.
    மாஸ்கோ:

    ரஷியாவின் வடக்கு கசசஸ் மாகாணத்தின் கரச்யா-சர்கிஸ்யா நகரில் உள்ள உச்ஹிஹன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரஷிய பயங்கரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் உச்ஹிஹன் கிராமத்தில் உள்ள அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். 

    பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததை உணர்ந்த அந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தால் தனது உடலில் வெடிகுண்டுகளை அந்த பயங்கரவாதி கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாரானான்.

    பாதுகாப்பு படையினர் வீட்டின் உள்ளே நுழைந்த உடன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதி வெடிக்கச்செய்தான். அந்த தற்கொலைப்படை தாக்குதலில் வெடிகுண்டை கட்டியிருந்த பயங்கரவாதி உடல்சிதறி உயிரிழந்தான். 

    ஆனால், பாதுகாப்பு படையினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை விட்டு சற்று விலகி இருந்ததால் அதிஷ்டவசமாக பாதுகாப்பு படையில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனாலும், பயங்கரவாதியின் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 6 பேர் காயமடைந்தனர்.

    தற்கொலைப்படை தாக்குதல் நடந்த பகுதி 1990 ஆம் ஆண்டு சிசன்யா மாகாண பிரிவினைவாதிகளுக்கும், ரஷிய படையினருக்கும் இடையே நடந்த மோதல் பகுதிக்கு அருகில் உள்ள மாகாணம் ஆகும். இதையடுத்து, இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு படையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×