search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப், ஜோ பிடன்
    X
    டிரம்ப், ஜோ பிடன்

    காணொளி வாயிலாக பங்கேற்க டிரம்ப் மறுப்பு- அதிபர் வேட்பாளர்களின் இரண்டாவது நேருக்கு நேர் விவாதம் ரத்து

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே அக்டோபர் 15ல் நடக்கவிருந்த நேருக்குநேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது நேருக்குநேர் விவாதம் அக்டோபர் 15 ஆம் தேதி மியாமியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு கட்சிகளும், இதுதொடர்பாக மாற்றுத் தேதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

    கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நேரடி விவாதத்தை காணொளி வாயிலாக நடத்த விவாதங்களுக்கான ஆணையம் முடிவு செய்தது. காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதை அடுத்து விவாதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான கடைசி நேருக்கு நேர் விவாதம் வரும் 22ம் தேதி டென்னிசி மாநிலம் நாஷ்வில்லேயில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் அதிபர் வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது.  

    Next Story
    ×