search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை - அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

    கொரோனா 2வது அலை ஊரடங்கு அச்சத்தால் இங்கிலாந்தில் மீண்டும் டாய்லெட் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    லண்டன்:

    கொரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இங்கிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் குவியும் மக்கள் டாய்லெட் பேப்பர் முதல் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் பல கடைகளில் ஷெல்ப்கள் காலியாக இருக்கின்றன.

    பல்பொருள் அங்காடிகள் தங்களிடம் போதுமான ஸ்டாக் இருப்பதாக அறிவித்தாலும், வார இறுதியில் கடைகளுக்கு சென்ற பிரித்தானியர்கள் ஷெல்ப்கள் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

    இதனால் முன்போலவே மீண்டும் பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது தெளிவாகவே தெரியவந்துள்ளது.இன்னொரு பக்கம், சில பிரபல பல்பொருள் அங்காடிகள், கடைகளுக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாவலர்களை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

    இதற்கிடையில், கடைகளுக்கு சென்று டாய்லெட் பேப்பர் முதலான பொருட்கள் இல்லாமல் ஏமாற்றமுற்ற மக்கள், சமூக ஊடகங்களில் காலியாக இருக்கும் ஷெல்ப்களை படம்பிடித்து பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.





    Next Story
    ×