search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித கால் தடம்
    X
    மனித கால் தடம்

    சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால் தடம் கண்டுபிடிப்பு

    சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்கால ஏரியில் மனித மற்றும் விலங்குகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மனித கால் தடம்


    புறநகர் பகுதியில் உள்ள இந்த வறண்ட ஏரியைச் சுற்றிலும் மனிதர்கள், யானைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்குகளின் கால்தடங்கள் கிடைத்துள்ளன. இதுவரை சுமார் 233 யானைகளின் புதைபடிவங்கள், 7 மனிதர்கள், 107 ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின் தடயங்களை அகழ்வாராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு சவுதி அரேபியாவில் மனித வாழ்வின் மிக பழமையான இருப்பு பற்றிய முதல் அறிவியல் சான்றுகளை குறிக்கிறது. அத்துடன் பிராந்தியத்தில் இயற்கை சூழல் மற்றும் பல்லுயிர் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×