search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    துபாயில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்

    3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துபாய் சாலை, போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
    துபாய்:

    துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் அந்தந்த பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது துபாயில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில் ஏ‌ற்கனவே சிவப்பு லைனில் இருந்த ஷரப் டிஜி மெட்ரோ ரெயில் நிலையம், மாஸ்ரெக் மெட்ரோ ரெயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே போல பச்சை லைனில் இருந்த பால்ம் தேரா மெட்ரோ ரெயில் நிலையம் இனிமேல் கோல்டு சூக் மெட்ரோ ரெயில் நிலையம் எனவும், சிவப்பு லைனில் இருந்த நகீல் ஹார்பர் அண்டு டவர் ரெயில் என்ற மெட்ரோ ரெயில் நிலையம் இனிமேல் ஜெபல் அலி மெட்ரோ ரெயில் நிலையம் எனவும் அழைக்கப்படும்.

    இதில் மாஸ்ரெக் என்பது தனியார் வங்கியின் பெயர் ஆகும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×