search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாம் மீது ராக்கெட் தாக்குதல்

    ஈராக்கில் உள்நாட்டுப் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ள முகாமின் மீது இன்று அடுத்தடுத்து ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களை அழிப்பதற்காக உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கூட்டுப் படையினர் தங்கி இருக்கும் முகாம்களின் மீது 20-க்கும் அதிகமான ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் போராளிகள் நடத்திய ஒரு தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த இரு ராணுவ வீரர்களும் பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.

    கோப்புப் படம்

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வடபகுதியில் கூட்டுப் படையினர் தங்கியிருந்த தாஜி விமானப்படை தளத்தின்மீது இன்று அடுத்தடுத்து பல ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான சேதங்களைப் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
    Next Story
    ×