search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான போர் விமானம்
    X
    விபத்துக்குள்ளான போர் விமானம்

    பாகிஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கி ஒருவர் பலி

    பாகிஸ்தான் தின விழாவுக்கான ஒத்திகையின்போது இன்று எப்-16 ரகப் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டத்தில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையொட்டி, ஆண்டுதோறும் இந்நாள் ‘பாகிஸ்தான் தினம்’என்ற பெயரில் அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது. குடியரசு தினம் என்றும் அழைக்கப்படும் இந்நாளில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நாட்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும்.

     விமானம் விழுந்த வனப்பகுதி

    இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் உள்ள அந்நாட்டின் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்ற சில போர் விமானங்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டன.

    சகார்பாரியா வனப்பகுதியின் மேலே பறந்துச் சென்றபோது, ஒரு எப்-16 ரகப் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விங் கமாண்டர் நவ்மன் அக்ரம் என்பவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×