search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எம்.டபிள்யூ கார்
    X
    பி.எம்.டபிள்யூ கார்

    துபாய் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வென்ற சென்னைவாசி

    துபாயில் சுமார் 30 ஆண்டுகளாக தொழில் செய்து அங்கேயே வாழ்ந்துவரும் சென்னைவாசி ஒருவர் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் சுமார் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வென்றுள்ளார்.
    துபாய்:

    துபாய் நகரில் உள்ள டென்னிஸ் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் WTA ஆண்கள் இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    துபாயில் சுமார் 30 ஆண்டுகளாக தொழில் செய்து அங்கேயே வாழ்ந்துவரும் சென்னையை சேர்ந்த சையத் என்பவர் இந்த போட்டியின்போது ‘துபாய் டியூட்டி ஃபிரீ டென்னிஸ் சர்ப்ரைஸ்’ லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியிருந்தார்.

    ஜாக்பாட் சீட்டை தேர்வு செய்த நோவாக் ஜோக்கோவிக்

    இந்த சீட்டுக்கான ஜாக்பாட் குலுக்கலில் பிரபல டென்னிஸ் சாம்பியனான நோவாக் ஜோக்கோவிக் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.

    இதில் சென்னையை சேர்ந்த சையத் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ. (BMW 750Li xDrive M Sport) சொகுசு காரை வென்றுள்ளார்.
    Next Story
    ×