என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 4 பேர் பலி
Byமாலை மலர்19 Feb 2020 9:55 PM GMT (Updated: 19 Feb 2020 9:55 PM GMT)
ஆஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கின.
இந்த கோர விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

Next Story
×