search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்டினா கோச்
    X
    கிறிஸ்டினா கோச்

    விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை - பூமிக்கு திரும்பும் நாசா வீராங்கனை

    சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீராங்கணை என்ற சாதனையை அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் தன்வசமாக்கியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கோச் (வயது 41). மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கிறிஸ்டினா விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய பெண் என்ற சாதனையுடன் பூமிக்கு இன்று திரும்பினார். சுமார் 328 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இந்தச் சாதனையை கிறிஸ்டினா படைத்துள்ளார்.

    ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் ஸ்க்வொர்ட்சோவ் ஆகியோருடன் கிறிஸ்டினா இன்று பூமியை வந்தடைந்தார். ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காமாஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, விண்வெளித் தளத்தில் இருந்தபடி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டினா பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘நீங்கள் தரைக்கும், உச்சிக்கும் இடையில் எப்போது வேண்டுமானாலும் குதிக்கக்கூடிய  ஒரு பகுதியில் இருப்பது, நிச்சயம் வேடிக்கையானது. விண்வெளியில் உள்ள மைகிரோ கிராவிட்டியை (மிகவும் பலவீனமான புவியீர்ப்பு விசை) மிஸ் செய்வேன்’ என தெரிவித்தார். 
    Next Story
    ×