search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம் செய்யப்பட்ட 609 ஆண்டுகள் பழமையான மசூதி
    X
    இடமாற்றம் செய்யப்பட்ட 609 ஆண்டுகள் பழமையான மசூதி

    துருக்கியில் 609 ஆண்டுகள் பழமையான மசூதி 3½ கி.மீ தொலைவுக்கு இடமாற்றம்

    ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 3½ கி.மீ. தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசார பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    அங்காரா:

    துருக்கியின் தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்தில் உள்ள பழமையான நகரம் ஹசன்கீப். இங்கு அந்த நாட்டின் கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன.

    இந்த நிலையில் ஹசன்கீப் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் டைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்படும்.

    அப்படி தண்ணீரை திருப்பிவிடும்போது, ஹசன்கீப் நகரில் உள்ள கட்டிடங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு உள்ள வரலாற்று சின்னங்கள் அனைத்தும் படிப்படியாக அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.

    அந்த வகையில் ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 3½ கி.மீ. தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசார பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    1,700 டன் எடை கொண்ட எரி ரிஸ்க் மசூதியின் மேல் பகுதி தனியாகவும், கீழ் பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டு 2 தனித்தனி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
    Next Story
    ×