search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹபீஸ் சயீத்
    X
    ஹபீஸ் சயீத்

    பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீதான விசாரணை தொடங்கியது

    பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் லாகூர் நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இன்று விசாரணை தொடங்கியது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 

    பயங்கரவாத செயல்களுக்கான நிதி பரிமாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தது. 

    இதையடுத்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த மேலும் 12 பேரை பாகிஸ்தான் கடந்த ஜூலை 17-ம் தேதி கைது செய்தது. லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பன விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது,  'ஹபீஸ் சையத் மற்றும் அவரது  கூட்டாளிகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்கி பல சொத்துக்களை வாங்கியுள்ளனர். 

    அந்த சொத்துக்கள் மூலம் மேலும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியுள்ளதற்கான ஆதாரங்களை பயங்கரவாத தடுப்பு போலீசார் சேகரித்து உள்ளனர்’ என பஞ்சாப் மாகாண அரசு தரப்பு துணை வழக்கறிஞர் வாதிட்டார். 

    இரு தரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி,  ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெறும் என தெரிவித்தார்.
    Next Story
    ×