என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
Byமாலை மலர்2 Dec 2019 6:42 PM GMT (Updated: 2 Dec 2019 6:42 PM GMT)
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இந்த வகை ஆப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்’’ என்றார்.

Next Story
×