search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
    X
    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

    இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது

    இலங்கைளில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது,
    இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

    இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

    கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா,

    வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். 24 ஆயிரத்தும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ரூ. 1.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    பதவில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சி தலைவர் போட்டியிடாதது 1982க்கு பிறகு இதுவே முதல் முறை.

    மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பணி தொடங்குகிறது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×