search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரிப் படம்
    X
    மாதிரிப் படம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 15 போலீஸ்காரர்கள் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி குந்தூஸ் மாகாணம் ஆகும். அங்குள்ள பல மாவட்டங்கள் அவர்களின் கட்டுக்குள் உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் அம்மாகாணத்தில் உள்ள அலி அபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பயங்கரவாதிகளை விரட்டியடித்தனர். இந்த சண்டையில் 15 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    கடந்த 2015 ம் ஆண்டு முதல் குந்தூஸ் மாகாணத்தில் தலிபான்கள் பல தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாகாண பகுதிகளை முழுமையாக கைப்பற்ற தலிபான்கள் முயற்சி செய்தனர். ஆனால் ராணுவத்தினரால் அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×