என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப் பாடகியின் ரூ.17½ கோடி பங்களா ஜப்தி?
Byமாலை மலர்14 Sep 2019 3:01 AM GMT (Updated: 14 Sep 2019 3:01 AM GMT)
வரி ஏய்ப்பு வழக்கில் பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்புள்ள பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
லண்டன் :
இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பிரைஸ். பாடகியாக மட்டுமல்லாமல் மாடல் அழகி, எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்ட கேட்டி பிரைஸ் ஒரு தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார்.
பல்வேறு துறைகள் மூலம் வருவாய் ஈட்டி வரும் கேட்டி பிரைஸ், முறையாக வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த வருடம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கேட்டி பிரைசுக்கு சொந்தமான 2 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.17 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம்) மதிப்புடைய சொகுசு பங்களாவை ‘ஜப்தி’ செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த ‘ஜப்தி’ நடவடிக்கையை தவிர்க்க 22,000 பவுண்டு வரி தொகையை செலுத்துவதாக கேட்டி பிரைஸ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதையடுத்து, தற்போது அவரது சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக லண்டனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 14-ந்தேதி விசாரணை நடக்க இருக்கிறது. இதில் கேட்டி பிரைஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார். எனினும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டதால் அவரது பங்களாவை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×