search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி
    X
    டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி

    ‘டுவிட்டர்’ நிறுவனரின் கணக்கு ‘ஹேக்’ ஆனது

    இனவெறி பதிவுகள் வெளியிடப்பட்டதால் டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் கணக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
    வா‌ஷிங்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக ஊடகம் டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி. இவர்தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவரது டுவிட்டர் கணக்கை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். இவரது டுவிட்டர் கணக்கில் வி‌‌ஷமி யாரோ சட்டவிரோதமாக புகுந்து, 15 நிமிடங்கள் தொடர்ந்து மிகவும் ஆபத்தான, இனவெறி கருத்துகளை பதிவிட்டு விட்டார். இது அவரது டுவிட்டர் கணக்கை பின்பற்றி வருகிறவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

    இது குறித்து அறிந்ததும் உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை டுவிட்டர் நிறுவனம் சரி செய்து விட்டது. ஆனால் யார் இப்படி செய்தது, இதற்கான பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.இருப்பினும், ‘‘டுவிட்டர் அமைப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை, மாறாக செல்போன் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பார்வை குறைபாடுதான் இதற்கு காரணம்’’ என டுவிட்டர் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.மேலும், ‘‘இந்த தவறால்தான் அங்கீகரிக்கப்படாத நபர் பதிவுகளை தயாரித்து, தொலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்சேவை தகவல்களாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்’’ எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
    Next Story
    ×