என் மலர்
நீங்கள் தேடியது "Jack Dorsey"
- பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய செயலி தகவல் தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.
எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் ஜாக் டோர்சி. இவர் 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகள், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (பாலோயர்) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், டுவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டுவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #DonaldTrump #JackDorsey #Twitter
Had an inspiring meeting with @jackpic.twitter.com/DJc2xOjSgi
— A.R.Rahman (@arrahman) November 15, 2018






