search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் ரான் ஜான்சன்
    X
    அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் ரான் ஜான்சன்

    அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை

    பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு புறப்படவிருந்த அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சனுக்கு ரஷ்ய அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் ரான் ஜான்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், ஐரோப்பா மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான செனட் வெளியுறவுக் குழுவின் துணைக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். 

    இவர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால் ரஷ்ய அரசு அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளது.

    இதுபற்றி செனட்டர் ரான் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய எம்.பி.க்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தேன். ஆனால் ரஷ்யா அரசு அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்துள்ளது. ரஷ்ய அரசு அதிகாரிகளுடனான நேரடி பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையேயான சிறந்த எதிர்கால உறவுகளுக்கு அடித்தளமாக அமையும் என்று நான் நம்பினேன். ரஷ்யாவின்  இந்த செயலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்காக நான் தொடர்ந்து வாதாடுவேன். சாத்தியக்கூறுகள் இருந்தால் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்துவோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது

    உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மசோதாக்களை ஜான்சன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×