என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி பணிகள் தீவிரம்
Byமாலை மலர்26 Aug 2019 6:58 AM GMT (Updated: 26 Aug 2019 6:58 AM GMT)
ரஷ்யாவில் கனரக ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாஸ்கோ:
ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் மூலம் Il-76MD-90A வகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் ஏவியேசன் எஸ்.பி. நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது விமானங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் விமானத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் இன்னும் உறுதி படுத்தவில்லை.
Il-76MD-90A என்பது ரஷ்யாவின் உலகப் புகழ்பெற்ற Il-76 விமானத்தின் அதி நவீனமயமாக்கப்பட்ட விமானம் ஆகும். இந்த விமானங்கள் முழு டிஜிட்டல் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு, PS-90A-76 ரக என்ஜின்கள் மற்றும் மேம்பட்ட எரிபொருள் திறன் அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்த விமானம் இராணுவ வீரர்களையும் மற்றும் இராணுவ உபகரணங்கள், எரிபொருட்கள், கொள்கலன்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், பாதுகாப்பாக தரையிறக்கவும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
4 தினங்களுக்கு முன்பு பாவர் 373 என்ற நீண்ட தூர வகை ஏவுகணை அமைப்பை ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியது. இந்த பாவர்- 373 வகை ஏவுகணை ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×