search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்லெஜ் நதியில் வெள்ளம்
    X
    சட்லெஜ் நதியில் வெள்ளம்

    சட்லெஜ் நதியில் முன்அறிவிப்பு இன்றி 2 லட்சம் கனஅடி நீரை இந்தியா திறந்து விட்டதால் வெள்ள அபாயம்: பாக்.

    சட்லெஜ் நதியில் முன்அறிவிப்பு இன்றி இரண்டு லட்சம் கனஅடி நீரை இந்தியா திறந்து விட்டதால் எங்கள் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மும்பை, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

    அதேபோல் உத்தரகாண்ட், பஞ்சாப், காஷ்மீர் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நதிகளில் வெள்ளம் அபாய நிலையை தாண்டி செல்கிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாய்ந்து ஓடும் நதி சட்லெஜ். இந்த நதியிலும் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

    இந்நிலையில் எந்தவித முன்அறிவிப்பு ஏதுமின்றி இரண்டு லட்சம் கன அடி நீரை இந்தியா திறந்து விட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள கசுர் மாவட்டத்தின் கந்தா சிங் வாலா கிராமத்தை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    சட்லெஜ் நதியில் வெள்ளம்

    இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் முக்தார் அகமது ‘‘இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ் நதியில் இருந்து பாகிஸ்தானுக்குள் எப்போது வேண்டுமென்றாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×