search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்கும் காட்சி
    X
    வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்கும் காட்சி

    சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 12 பேர் பலி

    சீன நாட்டில் கனமழை காரணமாக மலை கணவாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுற்றுலாபயணிகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் ஹம்பி மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள டியோபி ஜார்ஜ் பகுதி மலை முகடுகளால் சூழப்பட்ட நீர்வீழ்ச்சிகள் அதிகாமக அமைந்துள்ளது. 

    அதனை கண்டுகழிக்க உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இப்பகுதிகளுக்கு வருகின்றனர்.  ஆறுகளில் தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதில் படகு சவாரி செய்தும் தங்கள் பொழுதை கழிக்கின்றனர். 

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியின் பழைய புகைப்படம்

    இந்நிலையில், யோபி ஜார்ஜ் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 70-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். 

    இது குறித்து தகவறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வெள்ளத்தில் சிக்கிய 61-பேரை உயிடன் மீட்டனர். ஆனால் இந்த வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு நபரை காணவில்லை எனவும்  அவரை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

    Next Story
    ×