search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்கள்
    X
    ராணுவ வீரர்கள்

    ஆப்கானிஸ்தானில் 42 ராணுவ வீரர்களை விடுதலை செய்தது தலிபான்

    ஆப்கானிஸ்தானின் ஜோஸ்ஜான் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 42 ராணுவ வீரர்களை தலிபான் இயக்கம் விடுதலை செய்துள்ளது.
    மாஸ்கோ:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளால் ஸ்திரமற்ற அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள், அரசுப் படைகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இழந்த பகுதிகளை மீட்க ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடந்த சண்டையின் முடிவில், ஜோஸ்ஜான் மாகாணத்தின் குயிஷ் தேபா மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றினர். சண்டையின்போது பின்வாங்கிய ராணுவ வீரர்களை சிறைப்பிடித்தனர்.

    இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட 42 ராணுவ வீரர்களை தலிபான் இயக்கம் விடுதலை செய்தது. குயிஷ் தேபா மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு காணாமல் போன 4 வீரர்களும் இதில் அடங்குவர். விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் நேற்று மாகாண தலைநகரை வந்து சேர்ந்ததாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

    ஒருபுறம் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை ராணுவம் மேற்கொண்டுள்ள நிலையில், மறுபுறம் தலிபான்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×