search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தவறான டுவிட்டர் பதிவு -நெட்டிசன்கள் கிண்டல்
    X

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தவறான டுவிட்டர் பதிவு -நெட்டிசன்கள் கிண்டல்

    பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இது தற்போது நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இவரை 9.81 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இதில் இம்ரான் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் வரிகளை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் இப்போது நெட்டிசன்களால் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகிறது.  

    இந்த பதிவில், ‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இணைத்து பதிவிட்டிருந்தார்.



    இந்த பதிவில் சில எழுத்துப்பிழைகள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி அந்த வார்த்தைகள் கவிஞர் கலீல் கிப்ரானுடையது அல்ல. அவை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் ஆகும்.

    இதனைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் கமெண்ட் அடிக்க, வரிசையாக அடுத்தடுத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

    இந்த கமெண்ட்டுகளில் ஒருவர், ‘இம்ரான் உண்மையாகவே ஒரு நாட்டின் பிரதமர்தானா? டுவிட் செய்வதற்கு முன்பாக அது யாருடையது என்பதை சரியாக குறிப்பிட வேண்டும் என்பது கூடவா தெரியாது?’ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×