என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானில் கடும் மோதல்- 40 தலிபான்களை கொன்று குவித்த ராணுவம்
  X

  ஆப்கானிஸ்தானில் கடும் மோதல்- 40 தலிபான்களை கொன்று குவித்த ராணுவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 40 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
  காபுல்:

  ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறது. அதே போல் பயங்கரவாதிகளும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

  இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் டேசுபான் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

  இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் தலிபான் இயக்கத்தின் தளபதி உள்பட பயங்கரவாதிகள் சுமார் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக தலிபான்கள் உள்ளிட்ட அரசுக்கு எதிரான எந்த ஆயுதக்குழுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
  Next Story
  ×