search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் ராணுவம்"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் இமாம் சாகிப் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகளின் ராணுவப்பிரிவின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டார். #TalibanchiefMullaMansoor
    காபுல்:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடங்கள்மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த இருதரப்பு மோதலில் இந்த ஆண்டில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், குந்தூஸ் மாகாணத்துக்குட்பட்ட இமாம் சாகிப் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகளின் ராணுவப்பிரிவு தலைவர் முல்லா மன்சூர் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில கவர்னர் மஹ்பூபுல்லா சையதி தெரிவித்துள்ளார்.

    தாக்குதலுக்கு பயந்து பல தலிபான்கள் தப்பியோடி விட்டதாகவும், இருதரப்பு மோதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். #Talibanchiefkilled #AfghanistanTaliban #TalibanchiefMullaMansoor #MullaMansoorkilled 
    ×