என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயர்ந்த குடிமகனுக்கான விருது - பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
Byமாலை மலர்4 April 2019 9:23 AM GMT (Updated: 4 April 2019 9:23 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான சயித் பதக்க விருதை வழங்க உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது. #UAEZayedMedal #PMModi
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மிக உயர்ந்த சயித் பதக்கம் விருதை இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார். இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். #UAEZayedMedal #PMModi
Next Story
×