search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
    X

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார். மனைவியின் இறுதிச்சடங்கின் போது புஷ் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். 

    இதனை அடுத்து, ஹாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  ரத்த தொற்றால் பாதிக்கப்பட்ட அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

    வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் புஷ் இருப்பார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். 

    அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #GeorgeHWBush
    Next Story
    ×