என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கி: நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம் - 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் பலி
Byமாலை மலர்24 Jun 2017 12:02 AM GMT (Updated: 24 Jun 2017 12:02 AM GMT)
துருக்கி நாட்டில் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் குளித்துக்கொண்டிருந்த 3 சிறுவர்களும், சிறுவர்களை காப்பாற்றச்சென்ற 2 பேரும் பரிதாமாக உயிரிழந்தனர்.
அங்காரா:
துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியான சகார்யா மாகாணத்தில் உள்ள அக்யாஷி என்ற பகுதியில் உல்லாச பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 12, 15, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அதிலிருந்த சிறுவர்கள் அலறி துடித்தனர். இதனை கண்டதும் பூங்கா மேலாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டென தண்ணீரில் குதித்து சிறுவர்களை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், மின்சாரத்தில் சிக்கி 3 சிறுவர்கள் மற்றும் பூங்கா மேலாளர், மேலாளரின் மகன் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்ணீரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது குறித்து போலீசார் விடாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×