search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தமிழர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர்-ஐ குறிப்பிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி
    X

    இலங்கை தமிழர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர்-ஐ குறிப்பிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி

    இலங்கையின் நுவரெலியா பகுதி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பூர்வீக தமிழகர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
    கொழும்பு:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக இலங்கையில்தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு இன்று பிற்பகல் சென்றார். அங்கு, இந்தியாவின் நிதி உதவியுடன் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். 

    பின்னர், நுவரெலியா பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். அப்போது யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பழமொழியை குறிப்பிட்டு பேசினார். 

    மேலும் மோடி பேசியதாவது:-

    தேயிலைக்கும் எனக்கு தனிப்பட்ட உறவு உண்டு. இந்திய தேசிய தலைவர் எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்தவர். உங்கள் முன்னேற்றம் எங்கள் பெருமையாகும். பழமை வாய்ந்த தமிழ் மொழியை பேசுவதில் பெருமை

    நாம் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் உங்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தியா உதவியுடன் இலங்கையில் மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும். 

    மேற்கு தெற்கு மாகாணங்களில் 1990 ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும். 700 இலங்கை தமிழ் மாணவர்களுக்கு இந்திய அரசு உதவித் தொகை வழங்குகிறது. இலங்கையின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்தியா உதவும்.

    இவ்வாறு பேசினார்.
    Next Story
    ×