என் மலர்
உலகம்
- "காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
- போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்,
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை அமெரிக்காவால் வீழ்த்த முடியும் (கொல்ல முடியும்) என்று அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் படைகளுக்கு எதிராகப் பதிலடி வருவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய டிரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஜி7 மாநாட்டைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிய டிரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் 95 லட்சம் மக்களை வெளியேறுமாறு பதிவிட்டிருந்தார்.
இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் ஈரான் கணிசமான சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும், அமெரிக்காவின் உதவியுடன் அதன் அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் நிரந்தரமாகத் தாக்கும் வல்லமை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த மோதலுக்கு உண்மையான முடிவைக் காண விரும்புவதாகவும், போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
- பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது.
- சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.
ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான நேற்று நேற்று வெளியிடப்பட்டது.
அதில், "மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.
பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்.
சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்" என்று கூறப்பட்டிருந்தது.
- ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
- பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார்.
கடைசி நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன். முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், "உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.
ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புகளில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
- அதற்கு முன்னரே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்.
- தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது குறித்து விளக்கினார்.
இஸ்ரேல் - ஈரான் மோதலுக்குத் தீர்வாக போர் நிறுத்தத்தை முன்மொழியவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீடித்த தீர்வு மூலம் மோதலை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதே தனது முயற்சி" என்று கூறினார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்கா இராணுவத்தை அனுப்புமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கு முன்னரே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்; அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற மாட்டார்கள்" என்று எச்சரித்தார்.
தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் தலைமையகத்தை ஈரான் தாக்கியது.
மேலும், ஈரான் நான்காவது இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. இந்த விமானம் தப்ரிஸில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.
- இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
மேலும் தெஹ்ரானில் இருந்து சொந்த ஏற்பாடுகளில் வெளியேறக்கூடிய மற்ற இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் 24/7 அவசர உதவி எண்ணை (98 9128109115, 98 9128109109) அமைத்துள்ளது. வாட்ஸ்அப் எண்களும் (98 901044557, 98 9015993320, 91 8086871709) வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா இரு நாடுகளையும் பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார்.
- மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
- இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்
ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக் "இன்றைய(ஜூன் 17) தாக்குதலில், கண்காணிக்கவோ அல்லது இடைமறிக்கவோ முடியாத ஏவுகணைகளை நாங்கள் பயன்படுத்தினோம்" என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, இஸ்ரேல், ஈரான் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷாட்மானியை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றதாக அறிவித்தது. அலி ஷாட்மானி நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பதவியை ஏற்றிருந்தார். அவருக்கு முன் கொல்லப்பட்ட கோலம் அலி ரஷீத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கு ஈரானில் தங்கள் விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், சில ஏவுகணைகள் ஹெர்சிலியா உள்ளிட்ட நாட்டின் மத்திய பகுதிகளில் விழுந்து லேசான காயங்களை ஏற்படுத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த ஈரானியத் தாக்குதலில் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன.
இஸ்ரேலின் வெள்ளிக்கிழமை தொடங்கிய திடீர் தாக்குதல்களால் போர் மூலம் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பரஸ்பர வான்வழி தாக்குதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
- ஈரான் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
- இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் பயப்படுகிறது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது என்றும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருபக்கத்திலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணுஆயுத நிலைகளை தாக்குவதற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்காவிடம் கேட்டுள்ளது இஸ்ரேல். இந்த நிலையில் ஈரானின் ரகசியங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் அஞ்சுகிறது.
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும் தடைக்கான முழு விவரத்தை ஈரான் விவரிக்கவில்லை.
லெபனானில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய வாக்கி டாக்கியை ஒரே நேரத்தில் இஸ்ரேல் வெடிக்கச் செய்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அணுஆயுதம் தயாரிப்பதற்கான யூரேனியத்தை செறிவூட்டும் தளத்தை இஸ்ரேல் நேரடியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
- கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஈரானின் துணை புரட்சிகர காவல்படையின் ஜெனரலாக இருந்தவர்.
- கட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக சில நாட்களுக்கு முன்னர்தான் நியமிக்கப்பட்டார்.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது என்றும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருபக்கத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக சில நாட்களுக்கு முன்னர்தான் ஜெனரல் அலி ஷத்மானி நியமிக்கப்பட்டிருந்தார். இவர்தான் தாக்குலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் உடனடியாக ஷத்மானி கொல்லப்பட்டதை உறுதி செய்யவில்லை. இவர் ஈரானின் துணை புரட்சிகர காவல்படையின் ஜெனரலாக இருந்தவர்.
- ரொனால்டோ ஜெர்சியை டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
- இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு" என்று ரொனால்டோ எழுதியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
- நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் பிரான்ஸ் அதிபருக்கு தெரியாது
- இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.
ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், "விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்" என்று தெரிவித்தார்.
- ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது.
- இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.






