என் மலர்tooltip icon

    உலகம்

    • கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
    • இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும்.

    பிரதமர் மோட சைப்பிரஸ் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடாவிற்கு புறப்பட்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் தரையிறங்கியபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் aagiyvatrபோன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    • நான் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
    • ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது

    இஸ்ரேலும் ஈரானும் இன்று ஐந்தாவது நாளாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களை தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "அணு ஆயுத மேம்பாட்டை தடுப்பதற்காக நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறன், அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதே சமயம், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

    • அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகள் அனைவருக்கும் தெரியும்.
    • ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

    ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

    "இஸ்ரேல் நிதானத்தையும் பொது அறிவையும் காட்ட வேண்டும். அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகள் அனைவருக்கும் தெரியும்" என்றும் அவர் எச்சரித்தார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    மோதலைத் தணிக்க உதவுவதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் புதின் உறுதியளித்துள்ளார்.

    • தற்காப்பு கலைகள் மற்றும் டேக்வாண்டோ துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    • வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 60 பேரில் 29 குழந்தைகள் அடங்குவர்.

    தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இதில் கூட்டமைப்பின் டீனேஜ் நட்சத்திரமும் நாட்டின் எதிர்கால டேக்வாண்டோ நம்பிக்கையுமான அமீர் அலி அமினியும் அடங்குவார்.

    இந்த சம்பவம் ஈரானிய விளையாட்டு சமூகத்தை, குறிப்பாக தற்காப்பு கலைகள் மற்றும் டேக்வாண்டோ துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள இளம் வீரரான அமீர் அலி அமினி, தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் ஈரானிய டேக்வாண்டோவிற்கு பிரகாசமான எதிர்காலமாகக் கருதப்பட்டார்.

    அவரது மரணத்தின் சரியான இடம் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரானில் பல இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பல பொதுமக்களில் அமினியும் ஒருவர் என்று ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    அமீர் அலி அமினியின் மரணத்துக்கு பல விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே நேற்று வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஷாஹித் சாம்ரான் நோபோனியாட் குடியிருப்பு மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 60 பேரில் 29 குழந்தைகள் அடங்குவர்.  

    • பாகிஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.
    • மின்சாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், சமீபத்தில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.

    "பாகிஸ்தானின் சைபர் வீரர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளின்போது மின்விளக்குகளை ஹேக் செய்து அணைத்ததுடன், இந்திய அணைக் கதவுகளையும் ஹேக் செய்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

    இக்கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் அமைச்சரின் பேச்சு குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

    "மின்சாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது?", "அறிவியல் புரிதல் இல்லாமல் பேசுகிறாரா?" போன்ற கேள்விகளுடன் பலரும் அமைச்சரை விமர்சித்துள்ளனர்.

    • ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்தது.
    • நேரலையின்போது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஈரானில் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு, இந்திய ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு மிருகத்தனமான தாக்குதலில், சியோனிஸ்ட் குற்றவாளி ஆட்சி, ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்து, ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளது.

    அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் தெளிவாக மீறும் இந்த குற்றச் செயலை இந்தியாவில் உள்ள சுயாதீன ஊடகங்கள் கண்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே செய்தி நேரலையின்போது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

    • உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.
    • இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கின்றனர்.

    உணவுக்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 38 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம்தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரத்திற்கு அருகிலுள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையத்தை அடைய முயன்றபோது கொல்லப்பட்டனர் என்றும், சில பேர் அருகிலுள்ள கான் யூனிஸ் நகரின் புறநகரில் புதிதாக திறக்கப்பட்ட மையத்திற்குச் செல்லும் வழியில் சுடப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போர்வையில், அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நடந்த இதுபோன்ற சம்பவங்களில், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை செய்வதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியிருந்தது.

    இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை மற்றும் உதவிப் பொருட்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள், காசா பகுதியைப் பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

    • பாகிஸ்தானை FATF இன் "சாம்பல் பட்டியலில்" (grey list) மீண்டும் சேர்க்க இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
    • தற்போது, FATF இன் சாம்பல் பட்டியலில் 24 நாடுகள் உள்ளன.

    உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நிதி ஆதாரங்கள் மற்றும் நிதியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான வழிகள் இல்லாமல் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்துவதற்கு சாத்தியமில்லை என FATF வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "பயங்கரவாத தாக்குதல்கள் உலகெங்கிலும் உயிர்களைக் குடித்து, காயப்படுத்தி, அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை FATF ஆழ்ந்த கவலையுடன் கண்டிக்கிறது. இது போன்ற மற்றும் சமீபத்திய பிற தாக்குதல்கள் பணம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களிடையே நிதியை நகர்த்துவதற்கான வழிகள் இல்லாமல் நடந்திருக்க முடியாது," என்று FATF அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    இதற்கிடையே ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக, பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாகிஸ்தானை FATF இன் "சாம்பல் பட்டியலில்" (grey list) மீண்டும் சேர்க்க இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சாம்பல் பட்டியல் என்பது, அந்த நாடுகள் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இது அந்த நாடுகளின் உலகளாவிய நிதி நிலை மற்றும் சர்வதேச நிதியுதவிக்கான அணுகலை பாதிக்கும்.

    முதன்முதலில் 2008 இல் பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது, 2010 இல் நீக்கப்பட்டது. பின்னர் 2012 இல் மீண்டும் சேர்க்கப்பட்டது. 2015 இல் மீண்டும் நீக்கப்பட்ட பிறகு, 2018 இல் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அக்டோபர் 2022 வரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தற்போது, FATF இன் சாம்பல் பட்டியலில் 24 நாடுகள் உள்ளன.

    • உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.
    • ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.

    போரில் உயிரிழந்த 6,060உக்ரைனிய வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டதற்கு ஈடாக, ரஷியாவுக்கு, உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.

    போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடுமையான காயமடைந்த வீரர்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும், மெடின்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஜூன் 13 அன்று, உக்ரைன் ஏற்கனவே 1,200 உயிரிழந்த வீரர்களின் உடல்களை ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவின் படி உடல்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.
    • ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார்.

    தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து விழும் காட்சிகளும், காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.

    இஸ்ரேல் தெஹ்ரான் மக்களை வெளியேறுமாறு எச்சரித்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.

    மத்திய இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் விமான தளத்தைப் பார்வையிட்ட பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "தெஹ்ரானுக்கு மேலே உள்ள வானம் இஸ்ரேலிய விமானப்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் வெற்றிப் பாதையில் உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஈரான் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல் அவிவிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், ஈரான் வலுவான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எச்சரித்துள்ளது.

    இதுவரை, ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய இராணுவம் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அதேநேரம் ஈரானில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் போர்க்கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார்.
    • இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும்.

    மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார்.

    கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கவுரவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது.

    இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

    • ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
    • பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஈரான் நேற்று தூக்கிலிட்டது.

    இஸ்மாயில் ஃபெக்ரி என்ற அந்த நபர், ஈரானிய பாதுகாப்பு முகமைகளால் டிசம்பர் 2023 இல் கைது செய்யப்பட்டார். ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இம்மாதிரியான உளவு வழக்குகளின் விவரங்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. எனினும், ஃபெக்ரி பணத்திற்காக ஈரானின் ரகசிய தகவல்களை மொசாட்டிற்கு அனுப்ப முயன்றதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, மே மாத இறுதியில், பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.

    இந்த நிகழ்வுகள், ஈரான் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கு இடையேயான தீவிரமான மற்றும் இரகசிய மோதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

    ×