search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taekwondo"

    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
    • 14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

    14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 350 மாணவிகளும், இரண் டாம் நாள் நடைபெற்ற போட்டியில் 450 மாணவர்க ளும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டு தல்படி நடை பெற்ற இப்போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள்வேலுச்சாமி, குரு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப்பிடித்த மாண வர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டியினை புதிய விளையாட்டுப்போட்டிக் கான மாவட்ட இணைச்செய லாளரும், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி யின் உடற்கல்வி ஆசிரியரு மான காசி.ராஜேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பால சுப்பிரமணியன், நாகப்பட்டி னம் டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செய லாளர் தர்மா, உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    • சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி,ஜூன்.14-

    புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் தேக்வாண்டோ நடுவர் தேர்வு லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் உள்ள துரோணா தேக்வாண்டோ அகாடமியில் நடந்தது.

    சர்வதேச நடுவர் பகவத்சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், நந்த குமார், தஷ்ணபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிலம்பரசன், ஜெகதீஷ், தேவகணேஷ், கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள் வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.

    மதுரை

    தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
    • இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.

    ×