டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.
டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை
Published on

மதுரை

தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com