என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேக்வாண்டோ நடுவர்கள் தேர்வு
    X

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த காட்சி.

    தேக்வாண்டோ நடுவர்கள் தேர்வு

    • சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி,ஜூன்.14-

    புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் தேக்வாண்டோ நடுவர் தேர்வு லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் உள்ள துரோணா தேக்வாண்டோ அகாடமியில் நடந்தது.

    சர்வதேச நடுவர் பகவத்சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், நந்த குமார், தஷ்ணபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிலம்பரசன், ஜெகதீஷ், தேவகணேஷ், கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள் வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×