புதுக்கோட்டையில் - பள்ளி மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டி

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. 14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டையில் - பள்ளி மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 350 மாணவிகளும், இரண் டாம் நாள் நடைபெற்ற போட்டியில் 450 மாணவர்க ளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டு தல்படி நடை பெற்ற இப்போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள்வேலுச்சாமி, குரு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப்பிடித்த மாண வர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டியினை புதிய விளையாட்டுப்போட்டிக் கான மாவட்ட இணைச்செய லாளரும், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி யின் உடற்கல்வி ஆசிரியரு மான காசி.ராஜேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பால சுப்பிரமணியன், நாகப்பட்டி னம் டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செய லாளர் தர்மா, உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com