என் மலர்
உலகம்

அரசு அதிகாரிகள் லேப்டாப், மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடை
- ஈரான் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
- இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் பயப்படுகிறது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது என்றும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருபக்கத்திலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணுஆயுத நிலைகளை தாக்குவதற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்காவிடம் கேட்டுள்ளது இஸ்ரேல். இந்த நிலையில் ஈரானின் ரகசியங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் அஞ்சுகிறது.
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும் தடைக்கான முழு விவரத்தை ஈரான் விவரிக்கவில்லை.
லெபனானில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய வாக்கி டாக்கியை ஒரே நேரத்தில் இஸ்ரேல் வெடிக்கச் செய்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அணுஆயுதம் தயாரிப்பதற்கான யூரேனியத்தை செறிவூட்டும் தளத்தை இஸ்ரேல் நேரடியாக தாக்கியதாக கூறப்படுகிறது.






