என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்
    X

    இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

    • மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
    • இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

    ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.

    இந்தத் தாக்குதல்களில் மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக் "இன்றைய(ஜூன் 17) தாக்குதலில், கண்காணிக்கவோ அல்லது இடைமறிக்கவோ முடியாத ஏவுகணைகளை நாங்கள் பயன்படுத்தினோம்" என்று கூறினார்.

    இதற்கு முன்னதாக, இஸ்ரேல், ஈரான் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷாட்மானியை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றதாக அறிவித்தது. அலி ஷாட்மானி நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பதவியை ஏற்றிருந்தார். அவருக்கு முன் கொல்லப்பட்ட கோலம் அலி ரஷீத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கு ஈரானில் தங்கள் விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், சில ஏவுகணைகள் ஹெர்சிலியா உள்ளிட்ட நாட்டின் மத்திய பகுதிகளில் விழுந்து லேசான காயங்களை ஏற்படுத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த ஈரானியத் தாக்குதலில் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன.

    இஸ்ரேலின் வெள்ளிக்கிழமை தொடங்கிய திடீர் தாக்குதல்களால் போர் மூலம் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பரஸ்பர வான்வழி தாக்குதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×