என் மலர்tooltip icon

    உலகம்

    • வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை.
    • அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் டிரம்ப் அரசியல் உதவியாளர் செர்ஜியோ கோரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

    வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.

    • பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
    • விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை.

    நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் உயிர் தப்பினர்.

    இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.

    நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிச் சென்றபோது பஃபலோவிலிருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை. வேறு யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பல பயணிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இம்ரான்கான் மீது பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
    • இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பண மோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது. எனவே ராவல்பிண்டியில் உள்ள கோர்ட்டில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

    இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.

    • கள்ளக்காதலியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கியுள்ளார்.
    • Pament Failed ஆனதால் போன் செய்தபொது, போனை மனைவி எடுத்ததால் விசயம் தெரியவந்துள்ளது.

    சீனாவில் தன்னுடைய மொபைல் பேமென்ட் கோடு (Payment Code) மூலம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கிய நிலையில், ரூ.200 ரூபாய் Payment Failed ஆனதால், மெடிக்கலில் இருந்து போன் செய்ததால் மனைவிக்கு கள்ளக்காதல் தெரியவந்து, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள யங்ஜியாங்கில் உள்ள பகுதியில் ஒரு மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலின் membership card ஒருவர் வைத்துள்ளார். இவர் அந்த மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார். கருத்தடை மாத்திரைக்கான தொகை 200 ரூபாயை மொபைல் Payment Code மூலம் செலுத்திவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் Payment Failed ஆகியுள்ளது. இதனால் மெடிக்கல் ஸ்டாஃப் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த நபரின் போனை, அவரது மனைவி எடுத்துள்ளார். அப்போது மெடிக்கல் ஸ்டாஃப் தாங்கள் செலுத்திய 200 ரூபாய் கிரெடிட் ஆகவில்லை எனத் தெரிவித்துள்ளார். 200 ரூபாய்க்கு என்ன வாங்கினார்? என மனைவி கேட்க, மெடிக்கல் ஸ்டாஃப் கருத்தடை மாத்திரை வாங்கினார் எனக் கூறியுள்ளார்.

    இதனால் அந்த நபரின் கள்ளக்காதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இது இரண்டு குடும்பத்திலும் கடும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் இரண்டு குடும்பத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தனிப்பட்ட தகவலை, மனைவிடம் பகிர்ந்ததற்காக அந்த மெடிக்கல் மீது புகார் அளித்துள்ளார்.

    என்னதாக இருந்தாலும், அந்த நபர் தன்னுடைய தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், மெடிக்கல் ஸ்டாஃப் வேண்டுமென்றே தகவலை தெரிவித்துள்ளாரா? என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

    • விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்.
    • புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

    அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகளும் உன்னிப்பாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அவர்கள் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார்களா? விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் ஆராய்வார்கள்.

    இதற்காக, விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள், அவர்களின் சொந்த நாடுகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் அமெரிக்காவில் அவர்களின் நடத்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை, குறிப்பாக மாணவர் விசாக்களை நான்கு மடங்கு அதிகமாக ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்த கொள்வதற்கான அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
    • சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

    இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே-வை, நாட்டின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, போலீசார் கைது செய்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு 76 வயதாகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    முன்னதாக சிஐடி போலீசாரல் பயணச் செலவு குறித்து அவருடைய ஸ்டாஃப்களிடம் விசாரணை நடத்தியிருந்தது.

    பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோதபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியபோது, ரணில் விக்ரமசிங்கே, அதிபராக பதவி ஏற்றார். 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபராக இருந்தார். 6 முறை இலங்கை பிரதமராக இருந்துள்ளார்.

    • டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றது.
    • துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் மனமுவந்துள்ளார்.

    டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022 இல் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 2024 இல் அவருக்கு 500 மில்லியன் டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த வருட இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அமெரிக்க அதிபரானார்.

    இந்நிலையில் அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அதிகாரசபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    முந்தைய உத்தரவில் அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறியது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    நியூயார்க்கில் தனது வணிகத்தை முற்றிலுமாக பாதித்த உத்தரவை ரத்து செய்ய துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மனமுவந்துள்ளார். 

    • அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும், இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும்" விமர்சித்தார்.
    • இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்.

    ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளித்து உதவுவதாக அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதித்தது. இது வரும் 27 ஆம் தேதி அமலுக்கு வரும்.

    இந்நிலையில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுதந்திர வர்த்தகத்தின் முழுப் பலன்களையும் அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும், இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும்" விமர்சித்தார்.

    மேலும், "மௌனம், அச்சுறுத்துபவர்களை மேலும் வலிமையாக்குகிறது. சீனா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும். சீன சந்தையில் அதிகமான இந்திய பொருட்கள் வரவேற்கப்படுகின்றன.

    தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் உயிரி மருத்துவப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    மின்னணு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். சீனாவில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    சீன நிறுவனங்களுக்கு இந்தியாவும் இதேபோன்ற சலுகையை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சீனத் தூதர் கூறினார். 

    • இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
    • சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென் அமெரிக்காவின் டிரேக் பாஸேஜ் (Drake Passage) பகுதியில் இன்று அதிகாலை 8 முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    அதேநேரம் பசிபிக் சுமானி எக்காரிகை மையம், டிரேக் பாஸேஜ் நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் கடற்கரையில் அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த பயணி சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்தார்.

    ரோம்:

    இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது 1-வது முனையம் வழியாகச் சென்ற ஒரு பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதன்பின் அங்கிருந்த கவுண்ட்டருக்கு தீ வைத்தார். இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் செப்டம்பர் 23 வரை நீட்டித்தது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

    • இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.
    • சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.

    வாஷிங்டன்:

    இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளதாவது:

    இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.

    இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை.

    ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

    எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும் என தெரிவித்தார்.

    ×